ஒரு கோடி பெறுமதியான 2 வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிசங்குகளுடன் கைதான  இருவர் தொடர்பாக    கல்முனை  விசேட அதிரடிப்படையினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய   மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இரு வலம்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு  சந்தேக நபர்கள்  மட்டக்களப்பு சீனக்குடா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம்  இருந்து 1 கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகள்   விசேட அதிரடிப்படையினரால்   கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


- பாறுக் ஷிஹான் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.