மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு – 2023
கல்வி மற்றும் தொழிற் துறைகளில் நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் நாஸ் கலாசார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறை கபொத உயர்தா பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்லி. ஆன்மிக வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22,23ம் திகதிகளில் கொத்தட்டுவ நாஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 8:30 மணி முதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் இலங்கையில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களால் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்பட உள்ளன.
பெப்ரவரி 22ஆம் திகதி புதன்கிழமை மாணவிகளுக்கும், 23ஆம் திகதி வியாழக்கிழமை மாணவர்களுக்கும் என வெவ்வேறாக இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.