களனியை அண்மித்த பல பகுதிகளில் இன்று(21) காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வீதி புனரமைப்பு பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ​தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிகடமுல்ல, கெரவலப்பிட்டி, மாபோல, நாயக்கந்த, கலகஹதுவ, மருதானை வீதி, ஹூனுப்பிட்டி, வெடிகந்த, வேவெல்துவ, கிரிபத்கொடை புதிய வீதி, பாதிலியாதுடுவ, தலுப்பிட்டிய வீதி முதல் அக்பார் டவுன் பாலம் வரையான பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.