ஊர்காவற்றுறையில் எரிந்த நிலையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு


 யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பெண்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென். மேரிஸ் வீதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

இன்று காலை வேளையில் இருவரும் தீக்குளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. 

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.