3 மாதங்களில் QR முறைமை நீக்கப்படும் - காஞ்சன

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.