துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.


நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன.  

இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 31 ஆயிரத்து 643 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியர்களை மீட்கும் பணிகள் இன்னும்  தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.