36 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு

இதுவரை 13 நிலக்கரி கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார்.

12வது கப்பலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13வது கப்பலை தரையிறக்கும் பணிகள் நாளை (19) ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

36 நிலக்கரி கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ஹெவகே குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி தம்மிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.