3 அதிவேக வீதிகளின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாணப் பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.

ருவன்புர அதிவேக வீதி, மத்திய அதிவேக வீதியின் தம்புள்ளை பிரிவு மற்றும் கண்டி பிரிவுகளின் நிர்மாணப் பணிகளே இவ்வாறு  நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் மிகவும் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைத்தவுடன் பணிகள் செயற்படுத்தப்படும் என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.