7 நாள் குழந்தையை கொன்ற 28 வயது தாய் கைது
பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 28 வயதான தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பயாகல-ஹல்கந்தவில-கந்தகஹவில பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட குழந்தை அவருக்கு பிறந்த இரண்டு இரட்டை பெண்களில் இளைய குழந்தை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த 15ஆம் திகதி குழந்தை படுக்கையில் இருந்து விழுந்து களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும் பிரேத பரிசோதனையில் இது கொலை என தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துரையிடுக