75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தர்கா நகர் அல் ஹம்ரா மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு நேற்று தர்கா நகர் பாகீர் மாகர் விளையாட்டு அரங்கில் அதிபர் எம் எம் எம் பஸ்லியா தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தர்கா நகர் அல் ஹம்ரா மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு நேற்று தர்கா நகர் பாகீர் மாகர் விளையாட்டு அரங்கில் அதிபர் எம் எம் எம் பஸ்லியா தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது

தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் தேசமான்ய கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆளீம் பிரதம அதீதியாக கலந்து கொண்டார்.

தேசிய கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. பிரதம அதிதி தேசிய கொடியை ஏற்றி வைக்க பாடசாலை மாணவர்கள் தேசிய கீதம் பாடினர். 

பிரதம அதிதி உட்பட பிரமுகர்களினால் சமாதான புறாக்கள் இதன்போது பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்ஸம், முன்னாள் அதிபர்களாக எம்.இஸட்,எம். நயீம், மஸாயா நிஸாம், பன்நூல் ஆசிரியர்  ஹாபிஸ் இஸதீன், பழைய மாணவர் சங்க செயலாளரும் தர்கா நகர் ஆஸ்பத்திரி வைத்தியருமான டாக்டர் இர்ஸான் ஹரீஸ் உற்பட பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


கலாநிதி நஜீப் ஹாஜியார் நிகழ்வில் உரையாற்றும் போது நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தேசபிதா டீ.எஸ். சேனாநாயக, அமரர் எப்.ஆர். சேனாநாயக்க, கலாநிதி டீ.பீ. ஜாயா, சேர் பொன்னம்பளம் இராமநாதன், அருனாசளம் மஹாதேவா போன்ற சிங்கள், தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒரு கொடியின் கீழ் ஒன்றுபட்டு அன்று எமக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். 

அந்த சுதந்திர சுவாசத்தை நாம் இன்று சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் அனைவரும் தாய் நாட்டுப் பற்றுடன் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் உழைக்க வேண்டும். 

எமது முதுபெரும் தலைவர் மர்ஹூம் டீ.பீ. ஜாயா உற்பட முஸ்லிம் தலைவர்கள் காட்டிய வழியில் முஸ்லிம்கள் அன்று முதல் ,இன்றுவரை தாய் நாட்டுப்பற்றுள்ளவர்களாக வாழ்வதுடன் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் தியாகத்துடன் உழைத்தி வருகின்றனர் என்றார். 

கல்லூரியின் 125 வது வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பேருவளை பீ.எம். முக்தார்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.