இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, அரசு மற்றும் இலங்கை மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு 75 வருடங்கள் நிறைவடைவதைக் குறிப்பிட்ட பிரதமர், இரு நாடுகளும் நெருங்கிய வரலாற்று உறவுகள், புவியியல் நெருக்கம் மற்றும் கலாசார உறவுகளை அனுபவிக்கின்றன என்பதை எடுத்துரைத்தார். பொருளாதார மீட்சிக்காக இலங்கை மக்களுக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
கருத்துரையிடுக