7 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன
ஏழு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
நிதி விவகாரம் தொடர்பில் திறைசேரியுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.