நகல் பிரதி (Photo copy) ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


மின்சாரம், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பு காரணமாக நகல் பிரதி ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.


இதன்படி, A4 அளவு நகல் பிரதி 15 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அடையாள அட்டையின் நகல் பிரதி 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அச்சுப் பிரதிகள்(printout) வழங்குவதற்கான கட்டணமும் கறுப்பு வெள்ளைப் பிரதிக்கு 5 ரூபாவாலும் வண்ணப் பிரதியொன்றுக்கு 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.