கொழுந்து பறிக்கும் போட்டியில் சீதையம்மா முதலிடம் 

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில் பெண்களுக்கான தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி சனிக்கிழமை சமர்செட் பிரிவு தேயிலை தேயிலை மலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

குறித்த போட்டிகள் தேயிலையி துறையின் எதிர்கால இருப்பினை தக்க வைக்கும் முகமாகவும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும்  உட்சாகப்படுத்துவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது 

இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறந்த கொழுந்து பறிப்பாளராக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா தெரிவுசெய்யப்பட்டார். 20 நிமிடங்களுக்குள் இவர் பத்து கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும்
தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

வீ.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.