கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
குடிவரவுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
கருத்துரையிடுக