நடிகர் மயில்சாமியின் உயிர் பிரிந்த தருணம்!
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருக வைக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தீவிர சிவ பக்தரான மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்துகொண்டார். கோயிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 3:30 மணிக்கு இல்லம் திரும்பியுள்ளார். காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ளது. அப்போது இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகுதான் நெஞ்சு வலிக்கிறது என்று கூறியுள்ளார்.
குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவரது உடல் சென்னை சாலி கிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று ஏவிஎம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
கருத்துரையிடுக