நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது.

இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.