புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

TestingRikas
By -
0


புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)