மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


 கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் ​தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமது எதிர்ப்பையும் மீறி இலங்கை மின்சார சபையின் 66 வீத மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய மூவரும் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.