பிரபல மேரி ஸ்டெல்லா அணியை வீழ்த்தி கஹட்டோவிட அல்பத்ரியா சாம்பியன்
இன்று (19.02.2023) கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கால்பந்து சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்திரியா அணி சாம்பியன் பட்டம் வென்று அகில இலங்கை ரீதியான சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று ஆரம்பமான கம்பஹா வலய மட்ட போட்டிகளில் சகல போட்டிகளிலும் வென்று இன்றைய மாவட்ட ரீதியான சுற்றுக்கு தகுதி பெற்றது.
நேற்றைய தினம் நடந்த போட்டிகளில் முறையே Rajasingha அணியை 2-0 என்ற கணக்கிலும் Minuwangoda Nalanda அணியை 3-0 என்ற கணக்கிலும் Thaksila அணியை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இன்றைய சுற்றுக்கு தகுதி கண்டது.
இன்றைய காலிறுதிப் போட்டியில் உடுகொட அரபா வித்தியாலயத்தை எதிர்கொண்ட பத்ரியா அணி 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் நீர் கொழும்பு அல் ஹிலால் தேசிய பாடசாலையை எதிர்கொண்டது. இப்போட்டியில் 1-0 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டியது.
இறுதிப்போட்டியில் நீர் கொழும்பு மேரி ஸ்டெல்லா அணியை எதிர்கொண்டது அல் பத்ரியா. நட்சத்திர வீரர் Faizan இறுதி நேரத்தில் பெற்றுக் கொடுத்த கோல் பத்ரியா அணியை கம்பஹா மாவட்ட சாம்பியனாக மகுடம் சூட்டியதுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அகில இலங்கை ரீதியான சுற்றுக்கும் தகுதி பெற வைத்தது.
மேலும் இத்தொடரில் அல் பத்ரியா அணி எந்த ஒரு கோலையும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியதுடன்
அல் பத்ரியா சார்பாக மாணவன் Faizan மொத்தமாக 11 கோல்களை பெற்றுக் கொடுத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.
கருத்துரையிடுக