கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் புலமை சாதனையாளர்கள் கெளரவிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவிகளான, செல்வி என்.எப் நபீஹா மற்றும் செல்வி கே.எப் ஸஹ்றா ஆகியோரையும் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்டி பரிசில் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு இன்று(31) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலையின் முதல்வர் எம்.எஸ்.எம்.பைஷால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர். இதன் போது மாணவர்கள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பகுதித்தலைவர், பிரதி அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்த அடைவுக்காக சகல வழிகளிலும் உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும் அதிபர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட SDEC, PPA பிரதிநிதிகள், இந்த அடைவுக்காக பாடுபட்ட  அனைவரையும் நெறிப்படுத்தி ஆளுமையுடன் செயற்பட்ட அதிபரையும் பாராட்டி வாழ்த்தியதோடு, தற்போதுள்ள நிர்வாகத்தின் வினைத்திறனான செயற்பாடுகள் காரணமாக பாடசாலையின் கல்வி, கல்வி சாரா மற்றும் ஒழுக்க விழுமிய செயற்பாடுகளில் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியைத் தருவதாகவும் இது தொடர்ந்து செல்ல தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

(சர்ஜுன் லாபீர்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.