வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை

மாத்தறை வெலிகம பொலிஸிற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்து அங்கு கூடிய மக்களால் இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி நேற்று மாலை தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் முன் திரண்டதுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் இது தொடர்பான சம்பவத்தில் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.