மௌலவிமார் அறிமுகம் - சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் தப்லீகுல் இஸ்லாம் அரபு கல்லூரி
-(ஏ.எம். றிகாஷ்)
சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் தப்லீகுல் இஸ்லாம் அரபு கலாசாலையில் மௌலவி கற்கைநெறி மற்றும் சிறப்பு ஹதீஸ் கலை பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து வெளியாகவுள்ள 4 மௌலவிமார்களின் அறிமுகம் இன்று (17) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் அல்-ஹாஜ் மௌலவி எஸ். இஸ்மாலெவ்வை (தப்லீகி) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தப்லீகுல் இஸ்லாம் அரபு கலாபீடத்தின் கடந்த கால ஆரம்ப வரலாறுகள் உட்பட பல விடயங்கள் நினைவூட்டப்பட்டது..
அறிமுகம் செய்யப்பட்ட மௌலவிமார்களின் பெயர் விபரம் வருமாறு :
01. இப்றாலெப்பை முகம்மது றிஸ்கான்
(மீராவோடை - 04, ஓட்டமாவடி)
02. ஹாறூன் முஹம்மட் அதீப்
(இறக்காமம் - 03)
03. ஸஹாப்தீன் முஹம்மத் நப்லி
(கனுல்வெல , பிபில)
04. அப்துல் றசீட் றஸ்லி அஹமட்
(மலையடிக்கிராமம்)
நிகழ்வின் இறுதியில் வெளியாகவுள்ள மௌலவிமார்களால் அரபு, சிங்களம், ஆங்கிலம், தமிழ் , உருது மொழிகளால் நன்றியுரை வழங்கப்பட்டதோடு , பெற்றோர்களின் நன்றியுரையும் நடைபெற்று துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது
கருத்துரையிடுக