முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை !
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அந்த சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் மூன்று முறை பெற்றோல் விலை குறைக்கப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படவில்லை
எனவே, நேற்று நள்ளிரவு முதல் ஒக்டென் 92 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக