தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடிதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கடிதம் அனுப்பியுள்ளார்.
நேற்று (24) பிற்பகல் கடிதத்தை அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, குறித்த கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.