பாடசாலை மாணவிகளிடையே அதிகரித்த காதல் -காவல்துறை கடும் எச்சரிக்கை
பாடசாலை செல்லும் 14,15,16 வயதுடைய இளம் வயது மாணவிகள் ஆண்களுடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு தலைமறைவாகி வருவதாக கல்நேவ காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பொறுப்பதிகாரி ஆனந்த தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலை செல்லும் அதிகமான மாணவர்கள் போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகள் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.