அம்பாறை மாவட்டத்தில் விழுமியம் ஊடாக வன்முறை தவிர்ப்போம் பயிற்சிப்பட்டறை.

அம்பாறை மாவட்டத்தில் விழுமியம் ஊடாக வன்முறை தவிர்ப்போம் பயிற்சிப்பட்டறையானது கடந்த சனிக்கிழமை 2023.02.25 அன்று காரைதீவு மண்டபத்தில் மிகவிமர்சையாக இடம்பெற்றது. GCERF HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தி வரும்     HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் ஊடாக  இப் பயிற்சி வகுப்பு இடம்பெற்றமையானது குறிப்பிடதக்க அம்சமாகும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் எட்டு பிரதேச செயலகங்களில் இருந்தும் நான்கு மதங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
 இந் நிகழ்வில் வளவாளராக  ஆசிய மன்றத்தின் உத்தியோகத்தர் எச் .எம் ஜவாகீர் கலந்து சிறப்பித்தார்.விழுமியம் என்றால் என்ன? அதனை எவ்வாறு இளைஞர்கள் மத்தியில் வளப்படுத்தும் , எவ்வாறு விழுமியம் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் என இளைஞர்களால் கலந்துரையாடப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.