மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Toyota Lanka Pvt Ltd வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

Toyota Corolla மற்றும் Yaris கார்களில் ஏர்பேக்கை (Airbag ) இலவசமாக மாற்றுவது தொடர்பில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மோட்டார் வாகனம் தொடர்பான விவரங்கள் மற்றும் நடைமுறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய தகவல்களை மறுபரிசீலனை செய்து குறித்த மோட்டார் வாகன தகவல்களுடன் அளவுகோல்களை சரிபார்க்குமாறு Toyota Lanka தெரிவித்துள்ளது.

காரின் செஸ்ஸி / பிரேம் இலக்கம் மேலே உள்ள அளவுகோல்களுடன் பொருந்தினால், உங்கள் மோட்டார் வாகனத்தை அருகில் உள்ள டொயோட்டா லங்கா சேர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறு அந் நிறுவனம் பொதுமக்களுக்கு தெரிவிக்கிறது.

இது தொடர்பான விசாரணைகளுக்கும் , முன்பதிவு செய்வதற்கும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

0112 939 000 அல்லது 0777 939 158

இதேவேளை, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா நிறுவனமும் MITSUBISHI வாகன உரிமையாளர்களுக்கு Airbag தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், Stafford மோட்டார் நிறுவனமும் HONDA வாகன உரிமையாளர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்புக்கள் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.