தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பகுதியில் வசித்து வந்த எம்.ஜி.பிரேமதாஸ (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இன்று பிற்பகல் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.