திடீர் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ள ரயில் சாரதிகள்..!

 தொடருந்து சாரதிகள் இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புகையிரத பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாதமை மற்றும் நியாயமற்ற வரி அறவீடு தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.