இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 375 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் புதிய விலை 149 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசியின் விலை 198 ரூபாவாகவும் சிவப்பு பருப்பின் விலை 358 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.