இந்திய முட்டைகள் இந்த வாரம் இறக்குமதி


இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு மில்லியன் முட்டைகள் அடங்கிய கப்பல் இவ்வார இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதன்முறையாக இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.