திரிபோஷா வழங்குவதில் தொடர்ந்து சிக்கல்


சோளத்தில் அடங்கியுள்ள அஃப்லடொக்சின்(Aflatoxin) அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.நாட்டிலுள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக*பல ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்னவிடம் வினவிய போது, 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அஃப்லடொக்சின் அடங்கியுள்ள சோளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள ளோளச் செய்கையை கண்டறிவதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போதுள்ள சதவீதங்களை மாற்றியமைப்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக*இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.