பிரதமரின் பதவி விலகல் குறித்து முக்கிய அறிவிப்பு

 பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினரும் தன்னிடம் கோரவில்லை என்றும், தனது பதவி இராஜினாமா செய்வது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் இல்லையென்று பிரதமர் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதியின் ஒரு பகுதியே இது எனவும் உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.