ஜப்பான் கடற்கரையில்  உருண்டை வடிவ மர்ம பொருள்   !!

 இனம் காணும் முயற்சிகள் முன்னெடுப்பு
 
 ஜப்பான் கடற்கரையில் அடையாளம் தெரியாத உருண்டை வடிவ பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

 இது 1.5 மீற்றர் விட்டம் கொண்ட வெள்ளை நிற  வடிவத்தில் காணப்படுவதாக  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 எவ்வாறாயினும், அது என்ன வகையான பொருள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என ஜப்பானிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

 அது கரையொதுங்கிய  கடற்கரைப் பகுதி தற்போது பொதுமக்கள் உட்பிரவேசிக்க தடை செய்யப்பட்ட பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும்,   ஜப்பானிய ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.