முறையான தொழிற்கல்வி இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தேசிய தொழில்
தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்... 

கட்டுமானத் துறையில் அனுபவம் உள்ள கைவினைஞர்கள் ஆனால் முறையான தொழிற்கல்வி இல்லாதவர்களுக்கு தேசிய தொழில் திறன் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CIDA) மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுக்களின் (TVEC) ஒப்பந்தத்தின் படி, இது செயற்படுத்தப்படும்.

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். எச். ரூவின்ஸ் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ. லலிததீர, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நேற்று (22) கையொப்பமிட்டுள்ளார்கள். இது கொழும்பு 07, சவ்சிறிபாயவில் அமைந்துள்ள நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, முன் அறிவு மதிப்பீட்டு முறையின் (RPL) கீழ் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் NVQ நிலை 3 - நிலை 4 தேசிய தொழில்சார் சான்றிதழ்களை வழங்குவதற்கு நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் உண்டு. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கட்டுமானத் துறைகளுக்குத் தேவையான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முறையான அதிகாரமளித்தல் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இது திறமையான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில் கல்விச் சான்றிதழை வழங்குதல், பொதுத்துறையில் டிப்ளமோ படிப்புகள் மற்றும் பட்டங்களைத் தொடர உதவுதல் அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் பரிந்துரைத்தல் பதவி உயர்வு பெறுவது உள்ளிட்ட பயன்களைக் கொண்டுள்ளது.

இங்கு நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ ஜயசுந்தர இங்கு கருத்து தெரிவிக்கையில்,

“தற்போது இலங்கையில் சுமார் 5 முதல் 6 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 95% பேருக்கு தகுதி இருந்தும் முறையான சான்றிதழ் இல்லை. எனவே அவர்களுக்கு அந்தச் சான்றிதழைக் கொடுக்க விரைவில் தேவையான அமைப்பை தயார் செய்வோம் என நம்புகிறோம்.

திறமையான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை எங்கள் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அடையாள அட்டை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது. நாட்டின் நிலவும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் திறமையான கட்டுமானத் தொழிலாளர்களை முறையாகப் பயிற்றுவித்து, அவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்து வருகிறோம். அதில், நாட்டில் தற்போதுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என்றார். 

இலங்கையில் நிர்மாணத்துறையின் கட்டுப்பாட்டாளராக, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையானது தற்போது 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாண கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயல்படும் இந்த அதிகாரசபை, ஒப்பந்ததாரர்கள், சொத்து மேம்பாட்டாளர்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பாகங்கள் வழங்குபவர்கள் மற்றும் திறமையான கட்டுமானத் தொழிலாளர்கள் போன்ற கட்டுமானத் துறையில் பங்குதாரர்களைப் பதிவு செய்தல் உட்பட பல செயல்பாடுகளைச் செய்கிறது.

1990 ஆம் ஆண்டின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்விச் சட்டம் எண். 20 இன் விதிகளின் கீழ் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் பயிற்சித் துறையில் உச்ச அமைப்பாக உள்ளது.  1991 இல் நிறுவப்பட்டது. கல்வி அமைச்சின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாட்டில் கொள்கை உருவாக்கம், திட்டமிடல், தர உத்தரவாதம், மூன்றாம் நிலை மற்றும் தொழில்முறை கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல் ஆகியவை இதன் முதன்மைப் பொறுப்பாகும்.

நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நிரோஷ் வடகரவத்த, உதவிப் பணிப்பாளர் டி. கிரிஷானி, மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு பணிப்பாளர் அஜித் பொல்வத்த, உதவிப் பணிப்பாளர் சமன்மலி உதயகாந்தி மற்றும் அதிகாரிகள் குழுவினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.