மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் கோரலே கெதர பியதிஸ்ஸ தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராகக் கூறப்படும் மாவனல்லை பிரதேச சபைத் தலைவர் ஜனவரி 13ஆம் திகதி ஒரு தொழிலதிபரிடம் இருந்து 2 மில்லியன் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கட்டிடத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக பணத்தை பெற்றுக்கொண்ட போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்துள்ளது.
இதன்படி, மாவனல்லை பிரதேச சபைத் தலைவரால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் ஆராயுமாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமாரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி மூன்று மாத காலத்திற்குள் இந்த விடயத்தை ஆராய்ந்து சப்ரகமுவ மாகாண ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கருத்துரையிடுக