தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.

வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.