நிதியமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்ஜ தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் அழைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
இதனிடையே, அரச அச்சகருடனும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு உட்பட்ட விடயம் என்பதால் வாக்குச்சீட்டுகளை உடனடியாக ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கான பொறுப்பு தொடர்பில் அரச அச்சகருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
கருத்துரையிடுக