தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகத் தேர்வு - குழறுபடிகள்
தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகத் தேர்விற்கான ஒழுங்குமுறைகளில் பாரிய குழறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எழுந்துவரும் குற்றச்சாட்டுக்களை அடுத்து தேசிய கல்வியியல் கல்லூரி (பதில் கடமை நிறைவேற்று) ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகத் தேர்வு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தகைமை பெற்றவர்கள் தவிர்க்கப்பட்டு தகைமை குறைந்தவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தவிர, அருகிலுள்ள கல்வியியல் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்ய பணிப்புரை விடுக்கப்பட்ட போதிலும், ஆங்கிலப் பாடத்திற்கான நேர்முகத் தேர்விற்காக அம்பாறை மட்டக்களப்பு விண்ணப்பதாரிகள், பேராதனை கல்வியியல் கல்லூரிக்கு அழைக்கப்பட்டமை தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
பல பாடங்களுக்கான நேர்முகத் தேர்வுப்பட்டியலில் குழறுபடிகள் காணப்படுவதாகவும், இன ரீதியான பாகுபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரி ஆணையாளர் எச்.வீ.எம். சஞ்சீவனியை குறித்த பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக