பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில் புதிய தோற்றத்தில் முற்கொடுப்பனவு அட்டை முறையை மீண்டும் அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது.
கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக, பஸ் சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அடடை அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் ரயில்வே சேவைகளுக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முற்கொடுப்பனவு அட்டையை அரச வங்கிகள் ஊடாக பொதுமக்கள் பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக