அரசாங்கத்திடம் ஹிருனிக்கா முன்வைத்துள்ள யோசனை

அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி இன்று வரை கிடைக்கவில்லை என அரச அச்சகர் அறிவித்துள்ளார். 


அரச அச்சகர் சமீபத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார். இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்போது, தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குமாறு நாட்டில் உள்ள வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுக்கும் யோசனையை அரசாங்கத்திற்கு அவர் முன்வைத்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.