நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

TestingRikas
By -
0
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.

நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக ஜனவரி 24ஆம் திகதி நேபாளத்தில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகின.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி- என்சிஆர் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)