இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை நேற்று(13) மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இல்லை என பரிந்துரை கிடைத்துள்ளமைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 02 மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேக்கரி தொழில்கள் போன்ற தொழில்களுக்காக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.