நாளை விசேட போக்குவரத்து திட்டம்


75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (19) பிற்பகல் நடைபெறவுள்ள குடியரசு அணிவகுப்பு காரணமாக கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை மாலை 05.00 மணி தொடக்கம் அணிவகுப்பு முடியும் வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை மாலை 6 மணிக்கு தலதா மாளிகை முன்றலில் குடியரசு அணிவகுப்பு வீதி உலா ஆரம்பமாகி தலதா வீதி, யட்டி நுவர வீதி, ராஜா வீதி ஊடாக அணிவகுப்பு செல்லவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.