சற்று முன் கம்பஹா ஸ்ரீபோதி மைதானத்தில் நடைபெற்ற FFSL தங்க கிண்டத்துக்கான இறுதிப் போட்டியில் Kahatowita FC அணி வெற்றி பெற்றுள்ளது.

 கம்பஹா சுற்று தொடர்களின் போது Kahatowita FC அணிக்கு  மிகவும் சவாலாக இருந்த Gampaha Jetliner அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியே இந்த வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 முதல் பாதியில் Zimam, Amhar ஆகியோர் தலா ஒரு கோல் வீதம் போட்டு 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
 
இரண்டாம் பாதியிலும் தமது  திறமையை வெளிக்காட்டிய KFC அணிக்கு Mujeeb, Abdurrahman ஆகியோர் தமது பங்குக்கு இரு கோள்களை பெற்றுக் கொடுக்க எதிரணி ஒரே ஒரு கோலை மாத்திரம் தமக்காக பெற்றுக் கொள்ள போட்டி 4-1 கோல் கணக்கில் Kahatowita FC வசமானது.

 Kahatowita FC அணி ஏற்கனவே அரை இறுதியில் super league அனுபவம் வாய்ந்த Thihariya youth அணியை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.