சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் இன்று  (12) ஞாயிற்றுக்கிழமை  கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வு கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் ஆகியன இணைந்து நடாத்தின.


கம்பஹா, கொழும்பு , களுத்துறை போன்ற மேல் மாகாண மாவட்டங்களில் இருந்து சுமார் 125 மாணவ மாணவியர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களுக்கான அழைப்பிதழ் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 95% வீதமான மாணவ மாணவியர்கள் கலந்து பயன் பெற்றார்கள்.  


கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் பேண்ட் வாத்தியங்களுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. 

கிராத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்புரை , அதிதிகள் உரை , பாடசாலை மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் , 9A சித்தி பெற்ற மாணவ மாணவியர்க்கான  கௌரவிப்பு ,  பரிசில் வழங்கல் , நன்றியுரை என பல வண்ண நிகழ்வுகள் அரங்கேறின.. 


கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் 11 ஆவது தடவையாக நடாத்திய இந்நிகழ்வு பற்றியும் அது கடந்து வந்த பாதை, ஆரம்ப வரலாறு பற்றியும் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான எம்.இஸட். அஹமட் முனவ்வர் விளக்கமாக முன்வைத்தார்.. 

பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் பாயிஸ் முஸ்தபா அவர்களும் , கௌரவ அதிதியாக Dr.ஷாபி ஷிஹாப்தீன் அவர்களும் ,  சிறப்பு அதிதிகளாக  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பொதுச் செயலாளர் அல் ஹாபிழ் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் , பிஷ்ருல் முபீல் ( Trans Asia cellular Pvt Ltd Colombo ) ,  ரிஸ்வி மரிக்கார் ( principal of zahira college -  Colombo ) , அல்ஹாஜ்  M.Y.M. முகர்ரம் ( managing director - Trans Asia ) 
, பேராசிரியர் M.J.M. ரிஸ்வி ( university of colombo ) 
, அஷ்ஷெய்க் அல்ஹாஜ் S.L நௌபர் கபூரி ( Chairman Nidha ul Hyr ) , MR. பாலசுப்ரமணியம் ( Director - Sarita  Jewellery Pvt Ltd ) 
, அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுத்தீன் ( Chairman - Mushan International Pvt Ltd ) 

 ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

9 A சித்தி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் , புத்திஜீவிகள் , உலமாக்கள் , தனவந்தர்கள் , நலன்விரும்பிகள் , ஊர் மக்கள் , நிர்வாகத்தினர்  போன்றோரும் கலந்து கொண்டு நிகழ்வை நிறைவாக்கினர். 


தொகுப்பு : பயாஸா பாஸில் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.