ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

ஹைலெவல் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இரவு நேரத்தில் போட்டியிட்டு மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற பதினொரு மோட்டார் சைக்கிள்களுடன் பதினொரு பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

 

மஹரகம, பன்னிபிட்டிய, கொட்டாவ அரேவல, பிலியந்தலை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 11 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

ஹைலெவல் வீதியில் பன்னிபிட்டிய சந்தியில் இருந்து டங்கபோர்ட் சந்தி வரை பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்களை குறித்த இளைஞர்கள் பயன்படுத்தி போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதி மக்கள் 119 அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பேரில் அதிகாரிகள் குழுவினர் அதிகாலை 2 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று அவ்விடத்தில் போட்டிப்போட்டு மோட்டார் சைக்கிள்கள் ஓட்டிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.