"மாணவச் செல்வங்களுடன் நாம் 2023" எனும் தொனிப்பொருளில் 500 தேவையுடைய மாணவர்களுக்கான அப்பியாச பயிற்சி கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22.03.2023) சம்மாந்துறையில்  இடம் பெற்றது. இந்நிகழ்வில்  மல்கம்பிட்டி GMMS , தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலயம், ஏதாளகுளம் GMMS, அல் அஷ்ஹர் வித்தியாலயம் , கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயம் , அல் அர்ஷத் வித்தியாலயம் , ஜெனீஸ் வித்தியாலயம் , அஸ்ஸமா வித்தியாலயம் , ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயம் , அல் ஹம்ரா வித்தியாலயம் , அல் அஸ்மான் வித்தியாலயம் , அரபா வித்தியாலயம் , ஸபூர் வித்தியாலயம் , அல் மர்ஜான் வித்தியாலயம்  போன்ற பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக OCD  அமைப்பின் தலைவரும் விஞ்ஞான முதுமாணியும், சமூக சேவையாளருமான  அஸ்மி யாசீன் மற்றும்  OCD அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர்களான AJM. Haneefa , MM. Nizarudeen , MIM Bazeer உட்பட அமைப்பின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் அங்கத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.