ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை - பெவ்ரல் !
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறக்கணித்து வருவது வருந்தத்தக்கது.
அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நீதிமன்ற தீர்ப்புகளைக்கூட அலட்சியம் செய்யும் நிலைக்கு அரசு வந்துவிட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக